செய்திகள்
விமானத்துக்கு தேவையான பெட்ரோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது: டிரைவர்-கிளீனர் உயிர் தப்பினர்
சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் விமானத்துக்கு தேவையான பெட்ரோல் ஏற்றி வந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
காஞ்சீபுரம்:
சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி இன்று அதிகாலை விமானத்துக்கு தேவையான ‘ஒயிட்’ பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி சென்று கொண்டு இருந்தது. சங்கராபுரத்தை சேர்ந்த டிரைவர் அன்புமணி, லாரியை ஓட்டினார். கிளீனராக அன்பழகன் இருந்தார்.
இந்த நிலையில் காலை 5 மணி அளவில் காஞ்சீபுரத்தை அடுத்த சேக்காங்குளம் அருகே சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டேங்கரில் இருந்த பெட்ரோல் கசிந்தது. அதிர்ச்சி அடைந்த டிரைவரும், கிளீனரும் உடனடியாக தாவிக்குதித்து வெளியே வந்தனர்.
தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் வெளியே கொட்டி இருந்த பெட்ரோல் மீது ‘போம்’ எனப்படும் ரசாயன நுரையை பீய்ச்சி அடித்தனர். பின்னர் கிரேன் உதவியுடன் பள்ளத்தில் கிடந்த லாரியை மீட்டனர். விபத்து நடந்ததும் தீப்பிடிக்காததால் அதிர்ஷ்டவசமாக டிரைவரும், கிளீனரும் உயிர் தப்பினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீட்பு பணியின் போது முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இந்த விபத்து குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.