செய்திகள்

உத்திரமேரூர் அருகே மாட்டின் கயிறு கழுத்தில் இறுக்கி இளம்பெண் பலி

Published On 2016-10-12 11:51 IST   |   Update On 2016-10-12 11:51:00 IST
உத்திரமேரூர் அருகே மாட்டின் கயிறு கழுத்தில் இறுக்கி இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சீபுரம்:

உத்திரமேரூரை அடுத்த அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி விஜயா (26). விவசாயிகளான இவர்கள் மாடுகள் வளர்த்து வருகின்றனர்.

நேற்று காலை வழக்கம் போல் விஜயா மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார்.

மாலையில் மாடுகளுடன் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது மாடுகள் ஒன்றோடு ஒன்று முட்டி சண்டையிட்டன. ஒரு மாட்டின் கயிற்றை பிடிக்க விஜயா ஓடியபோது தவறி கீழே விழுந்தார்.

இதில் மாட்டின் கயிறு அவரது கழுத்தில் சுற்றிக் கொண்டது. மாடு மிரண்டு ஓடியதால் கழுத்து இறுகி விஜயா பரிதாபமாக பலியானார். இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Similar News