செய்திகள்
ராட்சத தூண் ஏற்றிய லாரி நடுரோட்டில் பழுதாகி நிற்பதை காணலாம்.

வேப்பூர் அருகே நடுரோட்டில் பழுதான கனரக லாரி: போக்குவரத்து பாதிப்பு

Published On 2016-09-13 12:19 IST   |   Update On 2016-09-13 12:19:00 IST
வேப்பூர் அருகே நடுரோட்டில் கனரக லாரி பழுதாகி நின்றதால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேப்பூர்:

ராணிப்பேட்டையில் இருந்து நெய்வேலி நிலக்கரி சுரங்கத்துக்கு ராட்சத இரும்பு தூணை ஏற்றிக்கொண்டு கனரக லாரி புறப்பட்டது. அந்த லாரி இன்று காலை கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு அருகே வந்தபோது திடீரென பழுதானது.

இதனால் சேலம், கள்ளக்குறிச்சி, திருச்சி, விருத்தாசலம் வழியாக செல்லும் வாகனங்கள் செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னர் சேப்பாக்கம் வழியாக மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன.

தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்தனர். லாரியை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. லாரி பழுதாகி நின்றதால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் வெளியூருக்கு செல்வோர் பெரும் அவதியடைந்தனர்.

Similar News