செய்திகள்

கொடுமுடி அருகே சூதாடிய 9 பேர் கைது

Published On 2016-08-16 22:43 IST   |   Update On 2016-08-16 22:43:00 IST
கொடுமுடி அருகே சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கொடுமுடி:

கொடுமுடி சப்-இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

கொடுமுடியை அடுத்த தாமரைப்பாளையம் பகவதியம்மன் கோயில் அருகே உள்ள கள்ளுக்கட்டில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த குழந்தைசாமி, துரை, தங்கமுத்து, ராமலிங்கம், செங்கோட்டையன்,செந்தில் குமார், கண்ணப்பன், மாரப்பன், சுரேஷ்குமார் என தெரிய வந்தது.

பிடிப்பட்ட 9 பேரிடம் இருந்து ரூ.7 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News