செய்திகள்
காஞ்சீபுரம் அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.5 கோடிக்கு மிரட்டி வாங்கிய 5 பேர் மீது வழக்கு
காஞ்சீபுரம் அருகே ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.5 கோடிக்கு மிரட்டி வாங்கிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து காஞ்சி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் எதோத்தகாரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா ராம் (60). பட்டுசேலை வியாபாரி. இவருக்கு காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு பகுதியில் 2 ½ ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு 30 கோடியாகும்.
இந்நிலையில் வெளி நாட்டில் தற்போது பதுங்கி வாழும் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பிரபல சாராய வியாபாரி ஸ்ரீதர், ராஜாராமை செல்போனில் தொடர்பு கொண்டு அந்த நிலத்தை தனது பெயரில் பத்திர பதிவு செய்து தரவேண்டும் என மிரட்டியுள்ளார்.
ராஜாராம் அதற்கு ஒப்புக்கொண்ட நிலையில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த முன்னாள் திமுக கவுன்சிலர் சந்துரு, விவேக் ஆனந்த் உள்ளிட்டோர் ராஜாராம் வீட்டிற்கு சென்று 5 கோடியை கொடுத்து கடந்த மாதம் 22-ம் தேதி காஞ்சீபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வரச் சொல்லி விட்டு சென்றனர்.
ராஜாராம் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற போது நிலம் ஸ்ரீதர் பெயருக்கு பதிவு செய்யப்படாமல் காஞ்சீபுரம் சேக்குப்பேட்டை நடுத்தெருவில் உள்ள பிரபல ஜவுளி கடை உரிமையாளரான சுப்பிரமணியஷா என்பவரின் பெயரில் பதிவு செய்வதை கண்டு திடுக்கிட்டார்.
இதுபற்றி ராஜாராம் விஷ்ணு காஞ்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் சுப்பிரமணியஷா மற்றும் அவரது மகன் கணேஷ்ஷா ஆகியோர்களிடம் விஷ்ணு காஞ்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் அந்த இடம் விற்பனைக்கு உள்ளதாக புரோக்கர்கள் மூலம் அறிந்துதான் பத்திர பதிவிற்கு வந்தேன்.
இதில் மோசடி நடந்தது எனக்கு தெரியாது. எனவே அந்த நிலத்தை மீண்டும் ராஜாராம் பெயருக்கே பத்திர பதிவு செய்து கொடுக்க சம்மதிக்கிறேன் என தெரிவித்தார். இதனையடுத்து நிலம் அதன் உரிமையாளரான ராஜாராம் பெயருக்கே மாற்றப்பட்டது.
நிலமோசடியில் ஈடுபட்ட சாராய வியாபாரி ஸ்ரீதர், சந்துரு, விவேக்ஆனந்த், சுப்பிரமணியஷா, கணேஷ்ஷா ஆகியோர் மீது விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.