செய்திகள்

மதுராந்தகம் அருகே சர்க்கரை ஆலையில் 1,500 பாம்புகள் பிடிபட்டன

Published On 2016-07-27 09:10 IST   |   Update On 2016-07-27 09:10:00 IST
மதுராந்தகத்தை அடுத்த படாளத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1,500 பாம்புகள் பிடிபட்டன. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சர்க்கரை ஆலைக்கு சென்று நிர்வாகிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்:

மதுராந்தகத்தை அடுத்த படாளத்தில் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 6 மாதமாக சர்க்கரை ஆலை செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு முள்புதராக உள்ள பகுதியில் அதிக அளவில் பாம்புகள் நடமாடுவதாக சர்க்கரை ஆலை ஊழியர்கள் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, சர்க்கரை ஆலை நிர்வாகம் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்தனர். அவர்கள் அங்கு இருந்த 1,500 பாம்புகளை பிடித்தனர். பாம்பு பிடிக்க வந்தவர்கள் பிடிபட்ட அனைத்து பாம்புகளையும் எடுத்துச் சென்று விட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சர்க்கரை ஆலைக்கு சென்று நிர்வாகிகளிடம் விசாரணையில் ஈடுபட்டனர்.

Similar News