செய்திகள்
சஸ்பெண்டு செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளை தப்ப விட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்டு

Published On 2016-07-20 16:35 IST   |   Update On 2016-07-20 16:35:00 IST
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளை தப்ப விட்ட இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. உத்தரவி பிறப்பித்துள்ளார்.
அரியலூர்:

விருதுநகரை சேர்ந்தவர் அலெக்ஸ் ராஜ். இவர் மதுரையில் போதை தடுப்பு பிரிவில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் நடந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கினை அலெக்ஸ் ராஜ் விசாரித்துள்ளார். அப்போது லஞ்சம் வாங்கிக்கொண்டு குற்றவாளிகளை வழக்கில் இருந்து தப்ப உதவி செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கு மதுரை கோர்ட்டில் நடந்து வந்தது.

மேலும் அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து அலெக்ஸ் ராஜ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் நிலைய சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

ஆனாலும் போதை பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகளை தப்ப விட்டது தொடர்பான வழக்கில் அலெக்ஸ்ராஜ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனை மதுரை கோர்ட்டு நேற்று உறுதி செய்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்டு செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News