செய்திகள்

கல்பாக்கம் கடலில் சூற மீன்கள் சிக்கியது: மீனவர்கள் மகிழ்ச்சி

Published On 2016-07-20 13:15 IST   |   Update On 2016-07-20 13:15:00 IST
கல்பாக்கம் கடலில் மீனவர்களின் வலைகளில் அதிகளவில் சூற வகை மீன்கள் சிக்கி வருகிறது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மாமல்லபுரம்:

காசிமேடு, ஆரம்பாக்கம், பொன்னேரி, மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் ஆழ்கடலில் மட்டுமே சுறா வகையை சேர்ந்த சூற மீன்கள் சிக்கும்.

இந்த நிலையில் மாமல்லபுரம் கடல் பகுதியில் மீனவர்களின் வலைகளில் அதிகளவில் சூற வகை மீன்கள் கடந்த 2 நாட்களாக சிக்கி வருகிறது.

சூற மீன்கள் இங்கு அதிகமாக பிடிபடுவது இதுவே முதல் முறை ஆகும். இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சூற மீன்களை 1 கிலோ 80 ரூபாய்க்கு சென்னை, பெங்களூர் வியாபாரிகள் வாங்கிச் செல்கிறார்கள் அங்கு சுறாபுட்டு, வருத்தமீன், மீன்கறி போன்ற உணவுகளுக்காக அதிகளவில் இந்த வகை மீன்கள் பயன்படுத்தப்படுகிறது. சூற மீன் நகரங்களில் கிலோ 400 வரை விற்பணையாகிறது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அணு உலை கொதிகலன் குளிர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் நீர் மீண்டும் கடலில் வெளியேற்றப்படுகிறது. இதனால் கதிரியக்கம் மற்றும் உயர் வெப்ப அழுத்தம் ஏற்பட்டு ஆழ்கடல் மீன்கள் கல்பாக்கம் பகுதியில் கிடைக்காது என்று கூறப்பட்டு வந்தது.

இதனை அணுமின் அறிவியலாளர்கள் மறுத்து வந்தனர். இந்த நிலையில் தற்போது மாமல்லபுரத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகிலேயே ஆழ்கடலில் சூற மீன்கள் பிடிபட்டுள்ளதால் அணுமின் நிலைய அறிவியலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News