செய்திகள்

பண்ருட்டி அருகே இடிதாக்கி வாலிபர் பலி

Published On 2016-07-17 17:16 IST   |   Update On 2016-07-17 17:16:00 IST
பண்ருட்டி அருகே மரத்தின் அடியில் நின்று வாலிபர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பலத்த இடி மின்னலுடன் மழை கொட்டியது. இதில் இடிதாக்கியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.

பண்ருட்டி:

பண்ருட்டி அருகேயுள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 24). இவரது நண்பர்கள் சந்தோஷ்குமார், பாரத், ராகுல், குணபாரதி, கோபி. இவர்கள் கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பசுமை வீடு கட்டும் திட்டத்தில் சூரிய ஒளி மின்சாரத்துக்கான தகடு பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஊருக்கு வந்திருந்த ரவிச்சந்திரன் தனது நண்பர்களுடன் வெள்ளிவாரி ஓடை அருகே மரத்தின் அடியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது பலத்த இடி மின்னலுடன் மழை கொட்டியது.

இதில் இடிதாக்கியதில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார். மற்ற 5 பேரும் காயமடைந்தனர். அந்த பகுதி மக்கள் 5 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத் திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Similar News