செய்திகள்

உத்திரமேரூர் அருகே லாரி மோதி கணவன்-மனைவி பலி

Published On 2016-07-05 11:52 IST   |   Update On 2016-07-05 11:52:00 IST
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்
காஞ்சீபுரம்:

சின்ன காஞ்சீபுரம், பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 32). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஆனந்தி (29). இவர்களுக்கு மோகேஷ் என்ற மகனும், 1½ வயதில் மோனிகா என்ற மகளும் உள்ளனர்.

நேற்று மாலை செல்வம் மேல்மலையனூர் கோவிலுக்கு குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். உத்திரமேரூரை அடுத்த கருவேப்பம்பூண்டி அருகே சென்ற போது எதிரே வந்த மினி லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே செல்வமும், ஆனந்தியும் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். தூக்கி வீசப்பட்ட குழந்தைகள் மோகேஷ், மோனிகா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்றோரை இழந்த குழந்தைகள் இருவரும் சிகிச்சைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Similar News