செய்திகள்

சட்டதிருத்தத்தை திரும்ப பெறக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி வக்கீல்கள் உண்ணாவிரதம்

Published On 2016-07-01 11:51 IST   |   Update On 2016-07-01 11:52:00 IST
சட்டதிருத்தத்தை திரும்ப பெறக்கோரி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் வாயில் கருப்பு துணியை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம்பரம்:

வக்கீல்கள் சட்டத்தில் ஐகோர்ட்டு கொண்டு வந்துள்ள திருத்தங்களை எதிர்த்து தமிழகம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தாம்பரத்தில் இன்று காலை இதே கோரிக்கையை வலியுறுத்தி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் சங்க தலைவர் ஸ்ரீராம் தலைமையில் வக்கீல்கள் வாயில் கருப்பு துணியை கட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் செயலாளர் ஓம் பிரகாஷ், இணை செயலாளர் அன்புச்செல்வன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது வக்கீல்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பப்பெறக்கோரி அவர்கள் கண்டன உரையாற்றினர்.

வக்கீல்களின் இந்த போராட்டத்தால் தாம்பரம் கோர்ட்டில் பணி பாதிக்கப்பட்டது

Similar News