செய்திகள்

காஞ்சீபுரம்: காச நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சையளிக்க ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள்

Published On 2016-06-30 13:48 IST   |   Update On 2016-06-30 13:48:00 IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் காசநோயை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்க ஏதுவாக சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டத்தில் காசநோயை முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தேசிய காச நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பணியாற்றும் காசநோய் தடுப்பு களப்பணியாளர்களுக்கு ரூ.6.79 லட்சம் மதிப்பீட்டில் 14 இரு சக்கர வாகனங்களை காஞ்சீபுரம் கலெக்டர் கஜலட்சுமி வழங்கினார்.

இதன் மூலம் களப்பணியாளர்கள் காச நோயினால் பாதிப்படைந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு மாத்திரைகள் வழங்குவது, நோய் தடுப்பு தொடர்பான ஆலோசனைகள் அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவர்.

இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து இருமல், காய்ச்சல், எடை குறைவு போன்றவைகள் இருந்தால் அவர்கள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் கஜலட்சுமி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர்.மீனாட்சி மற்றும் டாக்டர்கள் பூபதி, மதன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News