செய்திகள்

பவானிசாகர் அணை ஓரே நாளில் 3 அடி உயர்வு

Published On 2016-06-30 12:23 IST   |   Update On 2016-06-30 12:23:00 IST
கனமழையால் பவானிசாகர் அணை நீர்மட்டம் ஓரே நாளில் 3 அடி உயர்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்ட விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 1740 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நிர்மட்டம் 43.24 அடியாக இருந்தது.

இந்நிலையில் ஊட்டி மலை பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைக்கு தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்தது.

நேற்று இரவு 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 316 கனஅடி தண்ணீர் வீதம் வந்து கொண்டிருந்தது.

தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்ததால் ஒரே நாளில் அதாவது நேற்று இரவு 3 அடி உயர்ந்து உள்ளது.

இன்று (வியாழக்கிழமை) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 46 அடியாக இருந்தது.

தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வருவதால் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பவானிசாகர் அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Similar News