செய்திகள்

உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும்: சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. பேச்சு

Published On 2016-06-28 17:57 IST   |   Update On 2016-06-28 17:57:00 IST
உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று மொடக்குறிச்சி பேரூராட்சி, ஆனந்தம் பாளையம் ஊராட்சி பகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். செல்லாத்தாபாளையம், மொடக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் எம்.எல்.ஏவிற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

அவர் பேசும்போது, ‘‘அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்படும் அனைத்து அரசு திட்டங்களும் ஏழை - எளிய மக்களுக்கு சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. முறைப்படி அனைவருக்கும் நலத் திட்டங்கள் கிடைக்கும். வரும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.

மொடக்குறிச்சி ஒன்றிய செயலாளர் காகம் மணி, ஒன்றிய மகளிரணி செயலாளர் காந்திமதி, மொடக்குறிச்சி ஒன்றியக்குழு துணை தலைவர் கணபதி, ஒன்றிய கவுன்சிலர்கள் மயில் என்கிற சுப்பிரமணி, மணி என்கிற சண்முகம், ஆவின் இயக்குனர் அசோக், ஏ.பி.டெக்ஸ் தலைவர் பூவை தமிழன், ஆனந்தம்பாளையம் ஊராட்சி செயலாளர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் அரச்சலூர் பகுதியிலும் சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. நன்றி தெரிவித்தார். ஒன்றிய செயலாளர் காகம் மணி, பேரூராட்சி தலைவர் விஜயலட்சுமி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News