செய்திகள்

வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பணத்தை திருப்பித் தர வேண்டும்: விக்கிரமராஜா பேட்டி

Published On 2016-05-22 10:43 IST   |   Update On 2016-05-22 10:43:00 IST
வியாபாரிகளிடம் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா கூறினார்.
திருவாரூர்:

வியாபாரிகளிடம் தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்த பணத்தை உடனடியாக திருப்பித் தர வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரம ராஜா கூறினார்.

திருவாரூரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். தேர்தல் அறிக்கையில் வணிகர்களுக்காக தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் புதிய அரசு உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.

தேர்தலின் போது பல வியாபாரிகளிடமிருந்து ஆவணங்கள் இல்லையென பல கோடி ரூபாயை தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. இதனை உடனடியாக திருப்பி தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News