தமிழ்நாடு

தீக்குளிக்க முயன்ற முதியவர்கள் 2 பேரை படத்தில் காணலாம்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முதியவர்கள் 2 பேர் தீக்குளிக்க முயற்சி

Published On 2023-01-23 07:49 GMT   |   Update On 2023-01-23 07:49 GMT
  • நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
  • கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

பென்னாத்தூர் அருகே உள்ள அல்லி வரும் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70) இவர் இன்று காலை குறை தீர்வு கூட்டம் நடைபெறும் காயிதே மில்லத் அரங்கம் முன்பு வந்தார். திடீரென அவர் கொண்டு வந்திருந்த மண்எண்ணெய் எடுத்து தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.

அல்லிவரம் கிராமத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுதர வேண்டும் என கூறினார்.

இதே போல குடியாத்தம் அருகே உள்ள மோடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த நாகரத்தினம் என்ற முதியவர் இன்று காலை கலெக்டர் அலுவலக வாசலில் தனது உடலில் மண்ணெண்னை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர்.

மோடிக்குப்பம் கிராமத்தில் உள்ள நிலத்திற்கு வழிபாதை இல்லாமல் அவதிப்படுகிறேன். நீண்ட நாட்களாக வழிப்பாதை கேட்டு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

ஒரே நாளில் 2 முதியவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News