தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் 14 ஆயிரம் ஏரிகளில் இதுவரை முழுமையாக நிரம்பியது 1500 ஏரிகள்தான்

Published On 2023-12-01 11:04 IST   |   Update On 2023-12-01 11:04:00 IST
  • 2 ஆயிரம் ஏரிகள் 75 சதவீதம் அளவுக்குதான் நிரம்பி இருக்கிறது.
  • வட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் இன்னும் ஏரிகள் நிரம்பாமல் தான் உள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு இன்னும் பெய்யவில்லை. அக்டோபர் மாதத்தில் இருந்து இதுவரை 44 செ.மீ. அளவுக்கு மழை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் 35 செ.மீ. அளவுக்குத்தான் மழை பெய்துள்ளது. அதாவது 6 சதவீதம் குறைவாக உள்ளது.

இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் ஏரி, குளங்கள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தம் 14,139 ஏரிகள் உள்ளன. இவற்றில் 1500 ஏரிகள் மட்டும்தான் 100 சதவீதம் முழுமையாக நிரம்பி உள்ளது. 2 ஆயிரம் ஏரிகள் 75 சதவீதம் அளவுக்குதான் நிரம்பி இருக்கிறது.

இதுதவிர 2 ஆயிரம் ஏரிகள் 50 சதவீதமும் 3 ஆயிரம் ஏரிகள் 25 சதவீதமும் நிரப்பி உள்ளது. 

கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்த காரணத்தால் இந்த மாவட்டங்களில் ஏரி குளங்கள் நிரம்பி உள்ளன.

ஆனால் வட மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யாததால் இன்னும் ஏரிகள் நிரம்பாமல் தான் உள்ளது.

அதாவது 2 மாதங்களில் 35 செ.மீ. அளவுக்கு மழை பெய்திருந்தாலும் 60 சதவீத பாசன குளங்கள் பாதி அளவு கூட நிரம்பாமல் உள்ளது.

சில மாவட்டங்களில் நன்றாக மழை பெய்தும் ஏரிகளுக்கு தண்ணீர் முழுமையாக வந்து சேராததற்கு ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணம் என தெரிய வந்துள்ளது. ஆங்காங்கே சரிவர தூர்வாராமல் இருப்பதால் மழைநீர் ஏரிகளுக்கு வராமல் ஆற்றில் சென்று விடுகிறது.

இதன் காரணமாகவும் பல ஏரிகள் நிரம்பாமல் உள்ளன.

டிசம்பர் மாதம் மழை காலம் என்பதால் இந்த மாதத்தில் ஓரளவு மழை பெய்தால் ஏரிகள் இன்னும் நிரம்ப வாய்ப்பு உருவாகும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Tags:    

Similar News