தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் 14 இடங்களில் சதம் அடித்தது- சென்னையில் இன்று 102 டிகிரி வெயில்

Published On 2024-04-04 05:27 GMT   |   Update On 2024-04-04 05:27 GMT
  • அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது.
  • புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தென்இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (வியாழக்கிழமை) தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (5-ந்தேதி) முதல் 7-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் 8, 9-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 14 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 102 டிகிரி வெயில் பதிவானது.

ஒவ்வொரு ஊரிலும் பதிவான வெயிலின் அளவு வருமாறு:-

ஈரோடு-106.16, பரமத்திவேலூர்-105.8. தர்மபுரி-103.64, திருச்சி-103.46. மதுரை விமான நிலையம்-103.1, திருப்பத்தூர்-102.92, மதுரை நகரம்-102.56, சேலம்-102.56, நாமக்கல்-102.2 வேலூர்-102.02, திருத்தணி-101.84, கோவை-101.12, சென்னை மீனம்பாக்கம்-101.76, தஞ்சாவூர்-10.04.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News