விளையாட்டு
உலகக் கோப்பை ஸ்குவாஷ்: முதல் போட்டியில் சுவிட்சர்லாந்தை வீழ்த்திய இந்தியா
- இந்தியா 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது.
- இந்தியா அடுத்த ஆட்டத்தில் பிரேசிலை நாளை சந்திக்கிறது.
சென்னை:
5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.
இதில் முதல் ஆட்டத்தில் தேசிய சாம்பியனான தமிழகத்தின் ேவலவன் செந்தில்குமார் 7-6, 7-6, 7-5 என்ற நேர் செட்டில் சுவிட்சர்லாந்தின் ராபின் கடோலாவை வீழ்த்தினார். ஜோஸ்னா சின்னப்பா 7-1, 5-7, 7-2, 7-2, 7-0 என்ற செட் கணக்கில் ஸ்டெல்லா காப்மேனை 18 நிமிடங்களில் மடக்கினார்.
அபய்சிங், அனாஹத் சிங் ஆகிய இந்தியர்களும் தங்களது ஆட்டங்களில் வெற்றி தேடித்தந்தனர். முடிவில் இந்தியா 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தை தோற்கடித்தது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் பிரேசிலை நாளை சந்திக்கிறது.