விளையாட்டு

திருப்போரூர் வட்டார அளவில் கைப்பந்து போட்டி: மாவட்ட போட்டிக்கு பள்ளிகள் தேர்வு

Published On 2023-08-03 19:34 IST   |   Update On 2023-08-03 19:34:00 IST
  • போட்டியை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளி பொறுப்பேற்று நடத்தியது.
  • 20 பள்ளிகளில் இருந்து, 21 அணிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாமல்லபுரம்:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இடையே பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட அளவிலான மாணவ-மாணவிய வீரர்களை தேர்ந்தெடுத்து வருகிறார்கள். அதன்படி, திருப்போரூர் வட்டார அளவிலான கைப்பந்து போட்டியை மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளி பொறுப்பேற்று நடத்தியது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரபாகரன், உடற்கல்வி ஆய்வாளர் திருவளர்ச்செல்வன், ஒன்றிய கவுன்சில் தேசிங்கு, நெம்மேலி ஊராட்சி தலைவர் சீ.ரமணி உள்ளிட்டோர் போட்டியை துவக்கி வைத்தனர்.

இதில் 20 பள்ளிகளில் இருந்து, 21 அணிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 14, 17, 19, வயது பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டிகளில் நெம்மேலி அரசு மேல்நிலை பள்ளி, திருப்போரூர் ஆறுபடைவீடு மெட்ரிகுலேஷன் பள்ளி, கேளம்பாக்கம் புவனகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி, கேளம்பாக்கம் அரசு மகளிர் உயர்நிலை பள்ளி, ஆகியவை முதலிடங்களை பிடித்தது. இப்பள்ளிகள் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.

Similar News