டென்னிஸ்

2-வது குயின்ஸ் கிளப் பட்டத்தை வென்ற கார்லஸ் அல்காரஸ்

Published On 2025-06-23 15:47 IST   |   Update On 2025-06-23 15:47:00 IST
  • குயின்ஸ் கிளப் சர்வதேச டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா மோதினர்.

லண்டன்:

குயின்ஸ் கிளப் சர்வதேச டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), ஜிரி லெஹெக்கா மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கொன்றாக கைப்பற்றிய நிலையில் 3-வது செட்டை அல்காரஸ் கைப்பற்றி வெற்றி பெற்றார். அல்காரஸ் இந்த ஆட்டத்தில் 7-5, 6-7 மற்றும் 6-2 என்ற செட் கணக்கில் லெஹக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இது அவரது 2-வது குயின்ஸ் கிளப் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News