டென்னிஸ்
பெர்லின் ஓபன் டென்னிஸ்: மார்கெட்டா- வாங் சின்யு அரையிறுதிக்கு தகுதி
- முதல் செட்டை பவுலா 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
- காயம் காரணமாக 2-வது செட்டில் இருந்து பவுலா விலகினார்.
பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதன் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பானிஷ் வீராங்கனை பவுலா படோசாவும் சீன வீராங்கனை வாங் சின்யுவும் மோதினர்.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை பவுலா 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த செட்டில் இருந்து காயம் காரணமாக பவுலா விலகினார். இதனால் சீன வீராங்கனை அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் செக் நாட்டை சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரூசோவாவும் துனிசிய வீராங்கனை ஆன்ஸ் ஜபேரும் மோதினர். இந்த ஆட்டத்தில் மார்கெட்டா 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.