டென்னிஸ்

பெர்லின் ஓபன் டென்னிஸ்: மார்கெட்டா வோண்ட்ரூசோவா காலிறுதிக்கு தகுதி

Published On 2025-06-19 20:39 IST   |   Update On 2025-06-19 20:39:00 IST
  • பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
  • இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மார்கெட்டாவும் 2-வது செட்டை டயானாவும் கைப்பற்றினர்.

பெர்லின்:

பெண்கள் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் செக் நாட்டை சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரூசோவாவும் ரஷ்யாவை சேர்ந்த டயானா மாக்சிமோவ்னா ஷ்னைடரும் மோதினர்.

இந்த ஆட்டத்தில் முதல் செட்டை மார்கெட்டாவும் 2-வது செட்டை டயானாவும் கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டை மார்கெட்டா கைப்பற்றினார். இதன்மூலம் 6-3, 3-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று மார்கெட்டா காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

Tags:    

Similar News