விளையாட்டு
புரோ கபடி லீக்: தொடர் தோல்விகளால் தடுமாறும் தமிழ் தலைவாஸ்
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
- நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு 8.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய தபாங் டெல்லி அணி 37-31 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ் தலைவாஸ் அணிக்கு இது 11-வது தோல்வியாகும்.
மற்றொரு போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 42-29 என்ற புள்ளிக்கணக்கில் யுபி யோதாஸ் அணியை வீழ்த்தியது.