விளையாட்டு

குகேஷிடம் டிங் லிரென் வேண்டுமென்றே தோற்றார்: ரஷியா செஸ் பெடரேசன் தலைவர் பகீர் குற்றச்சாட்டு

Published On 2024-12-13 15:40 IST   |   Update On 2024-12-13 15:40:00 IST
  • தலா இரண்டு வெற்றி, 9 டிராவிற்குப் பிறகு கடைசி சுற்றான 14-ல் நேற்று மோதல்.
  • 58-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. தமிழக வீரரான டி. குகேஷ் சீனாவின் டின் லிரேனை எதிர்கொண்டார். 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் 13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றிருந்தனர். 9 சுற்றுகள் டிராவில் முடிவடைந்திருந்தது.

இந்த நிலையில்தான் 14-வது சுற்று நேற்று நடைபெற்றது. இந்த சுற்றில் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியும் என்பதால் இருவரும் வெற்றிக்காக போராடினர். சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற போட்டியில் 58-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு குகேஷ் வெற்றி பெற்றார்.

சுமார் 3 மணி நேர ஆட்டத்திற்குப் பிறகு லிரென் போட்டியை டிரா செய்ய முயற்சித்தார். ஆனால் டிரா செய்ய முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

இதனால் 18 வயதான குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று சாதனைப் படைத்தார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், சீன வீரர் டிங் லிரென் வேண்டுமேன்றே தோற்றதாக சந்கேம் ஏற்படுவதாக ரஷிய செஸ் பெடரேசன் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக ரஷிய செஸ் பெடரேசன் தலைவர் அன்ட்ரெய் பிளாடோவ் தெரிவிக்கையில் "கடைசி ஆட்டத்தின் முடிவு தொழில் வல்லுநர்கள் மற்றும் செஸ் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. முக்கியமான சுற்றில் சீன வீரர் டிங் லிரெனின் செயல் மிகவும் சந்தேகத்திற்குரியவை. இது தொடர்பாக சர்வதேச செஸ் பெடரேசன் தனி விசாரணை நடத்த வேண்டும்.

டிங் லிரென் இருந்த நிலையை இழப்பது (சாம்பியன் பட்டத்தை) முதல் தர வீரருக்குக் கூட கடினம். இன்றைய ஆட்டத்தில் சீன சதுரங்க வீரரின் தோல்வி நிறைய கேள்விகளை எழுப்புகிறது. மற்றும் வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News