விளையாட்டு

பாரிஸ் ஒலிம்பிக்: பேட்மிண்டன் போட்டிக்கு ஏழு இந்திய வீரர்- வீராங்கனைகள் தேர்வு

Published On 2024-04-29 15:08 GMT   |   Update On 2024-04-29 15:08 GMT
  • பிவி சிந்து தரவரிசையில் 12-வது இடத்தை பிடித்து தகுதி பெற்றுள்ளார்.
  • பிரனோய் 9-வது இடத்தையும், லக்ஷயா சென் 13-வது இடத்தையும் பிடித்து தகுதி பெற்றுள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் ஏழு வீரர்- வீராங்கணைகள் தகுதி பெற்றுள்ளனர்.

பி.சி. சிந்து, ஹெச்.எஸ். பிரனோய், லக்ஷயா சென் ஆகியோர் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டனர். இருந்தபோதிலும் இன்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பேட்மிண்டன் சங்கத்தின் தரவரிசையில் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள், முதல் 16 இடங்களில் இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தகுதி பெறுவார்கள். முன்னாள் உலக சாம்பியனும் ஒலிம்பிக்கில் வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றவருமான பிவி சிந்து தரவரிசையில் 12-வது இடத்தை பிடித்து தகுதி பெற்றுள்ளார்.

பிரனோய் 9-வது இடத்தையும், லக்ஷயா சென் 13-வது இடத்தையும் பிடித்து தகுதி பெற்றுள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஆகியோர் 3-வது இடத்தை பிடித்துள்ளனர். இவர்கள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பெண்கள் இரட்டையர் பிரிவில் தனிஷா கிராஸ்டோ- அஸ்வினி பொண்ணப்பா ஆகியோர் 13-வது இடம் பிடித்து தகுதி பெற்றுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவில் மற்றொரு ஜோடியான திரீஷா ஜோலி- காயத்ரி கோபிசந்த் ஆகியோர் வாய்ப்பை தவறவிட்டனர்.

Tags:    

Similar News