விளையாட்டு
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்: இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அசத்தல்..!
- சீனியர் பிரிவில் 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம்.
- மூன்று பிரிவுகளிலும் சேர்த்து 103 பதக்கங்கள் வென்றுள்ளது.
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் போட்டி கஜகஸ்தானில் நடைபெற்றது. இதில் 25 மீ சென்டர் ஃபயர் (25m centre fire) பிரிவில் இந்திய வீரர் ராஜ்கன்வார் சிங் சந்து தங்கப் பதக்கம் வென்றார். அன்குர் மிட்டல் டபுள் ட்ரப் பிரிவில் தங்கம் வென்றார்.
பெண்களுக்கான டபுள் டிரப் பிரிவில் அனுஷ்கா பாதி (93 புள்ளி) தங்கம், பிரனில் இங்க்லே (89) வெள்ளி, ஹபீஸ் கான்ட்ரக்டர் (87) வெண்கல பதக்கம் வென்றனர். மூன்று பேரும் அணிப் பிரிவில் தங்கம் வென்று அசத்தினர்.
சீனியர் பிரிவில் இந்தியா 14 தங்கம், 8 சில்வர், 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 2ஆவது இடம் பிடித்தது. சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 3 வெண்கலம் என 30 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது.
ஒட்டுமொத்தமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் (சீனியர், ஜூனியர், இளையோர்) மூன்று பிரிவுகளில் 103 பதக்கங்கள் வென்றனர்.