விளையாட்டு
தேசிய ஜூனியர் தடகளம்: 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனை
- ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் பாண்டியன் (21.33 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார்.
- டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் தமிழக வீரர் ரவி (15.44 மீட்டர்) முதலிடம் பிடித்தார்.
பிரயாக்ராஜ்:
23-வது தேசிய ஜூனியர் (20 வயதுக்கு உட்பட்டோர்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் 3 நாட்கள் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் பாண்டியன் (21.33 வினாடி) தங்கப்பதக்கம் வென்றார்.
டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் தமிழக வீரர் ரவி (15.44 மீட்டர்) முதலிடம் பிடித்தார். பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை தேசிகா (22.44 வினாடி) தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். டிரிபிள்ஜம்ப் பந்தயத்தில் தமிழக வீராங்கனைகள் சாதனா (12.75 மீட்டர்) முதலிடமும், பவீனா ராஜேஷ் (12.55 மீட்டர்) 2-வது இடமும் பெற்றனர். நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் பாவனா (6.29 மீட்டர்) தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.