விளையாட்டு

பிரீமியர் லீக் கால்பந்து: லிவர்புல் அணியை வீழ்த்தியது மான்செஸ்டர் யுனைடெட் அணி

Published On 2022-08-23 09:45 GMT   |   Update On 2022-08-23 09:45 GMT
  • இரண்டாவது பாதி ஆட்டத்தில் 53-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் மார்கஸ் ரஷ்போர்ட் கோல் அடித்தார்.
  • 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்அணி வெற்றி பெற்றது.

2022- 23 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் லீக் கால்பந்து போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் - லிவர்புல் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 16- வது நிமிடத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி வீரர் ஜடோன் சான்சோ கோல் அடித்தார்.இதனால் முதல் பாதியில் 1-0 என மான்செஸ்டர் யுனைடெட் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் 53-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் மார்கஸ் ரஷ்போர்ட் கோல் அடித்தார்.பின்னர் லிவர்புல் அணியின் மொகமது சலா 81-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்அணி வெற்றி பெற்றது.

Tags:    

Similar News