விளையாட்டு

4வது தொடர் வெற்றி: மென்செஸ்ட்டர் சிட்டி வரலாற்றுச் சாதனை

Published On 2024-05-20 11:47 IST   |   Update On 2024-05-20 11:47:00 IST
  • 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது.
  • வெற்றியை தொடர்ந்து சிட்டி அடுத்த வாரம் மேலும் ஓர் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது.

பிரிமியர் லீக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கான போட்டி நடைபெற்றுவந்தது. நேற்றிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி- வெஸ்ட் ஹெம் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் மென்செஸ்ட்டர் சிட்டி 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வெஸ்ட் ஹெம் (West Ham) அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ந்து 4-வது முறையாக பிரிமியர் லீக் கோப்பையை மென்செஸ்ட்டர் சிட்டி கைப்பற்றியுள்ளது. 4 முறை பிரிமீயர் லீக் பட்டங்களை வென்ற முதல் இங்கிலீஷ் கிளப் என்ற வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளது.

ஆட்டத்தின் 2ஆவது, 18ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல்கள் போட்ட சிட்டி ஆட்டக்காரர் பில் ஃபோடன் (Phil Foden) இப்பருவத்தின் சிறந்த ஆட்டக்காரராக அறிவிக்கப்பட்டார்.

இந்த வெற்றியை தொடர்ந்து சிட்டி அடுத்த வாரம் மேலும் ஓர் ஆட்டத்தில் களமிறங்கவுள்ளது. மே 25ஆம் தேதி வெம்ப்லி (Wembley) அரங்கில் நடைபெறவுள்ள FA கோப்பை இறுதியாட்டத்தில் சிட்டி பரம வைரி மென்செஸ்ட்டர் யுனைட்டடைச் (Manchester United) சந்திக்கிறது.

Tags:    

Similar News