விளையாட்டு
null

செஸ் சாம்பியன்ஷிப்: ஜீன்ஸ் அணிந்து வந்ததற்காக மேக்னஸ் கார்ல்சன் தகுதி நீக்கம்

Published On 2024-12-28 10:18 IST   |   Update On 2024-12-28 11:55:00 IST
  • விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.
  • ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொண்டு போட்டியில் பங்கேற்குமாறு கார்ல்சனுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நார்வே நாட்டு செஸ் கிராண்ட்மாஸ்டர் மற்றும் ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன் ஜீன்ஸ் அணிந்து போட்டியில் பங்கேற்க வந்ததற்காக உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

மேக்னஸ் கார்ல்சன் 2ஆம் நாள் போட்டிக்கு ஜீன்ஸ் அணிந்து வந்தார். போட்டியின் ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை மீறியதற்காக கார்ல்சனுக்கு 200 அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜீன்ஸ் உடையை மாற்றிக் கொண்டு போட்டியில் பங்கேற்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கு கார்ல்சன் மறுப்பு தெரிவித்த நிலையில் போட்டியின் 9வது சுற்றிலிருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக FIDE தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனால் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து வெளியேறினார்.

Tags:    

Similar News