ஆசிய விளையாட்டு போட்டி: கபடி, கிரிக்கெட்டில் தங்கம் வென்று இந்தியா அசத்தல்- பதக்கம் 107ஆனது! லைவ் அப்டேட்ஸ்
ஸ்குவாஷ் ஆண்கள் பிரிவு ஏ, போட்டி 17ல் இந்தியா - கத்தார் அணிகள் மோதின. இப்போட்டியில் கத்தாரை 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றிபெற்றது. நாளை நடைபெற உள்ள அடுத்த சுற்றில் இந்திய அணி குவைத்திடம் மோத உள்ளது.
வாலிபால் போட்டியில் 5வது மற்றும் 6வது இடத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் இந்தியாவை 0-3 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 5ம் இடம் பிடித்தது. அதேவேளை தோல்வியடைந்த இந்தியா பட்டியலில் 6ம் இடம் பிடித்தது.
ஆண்களுக்கான 1500 மீட்டர் நீச்சல் போட்டியில் ப்ரீஸ்டைல் பிரிவில் இந்தியா சார்பில் விளையாடிய ஆர்யன் நெஹ்ரா மற்றும் ராவத் குஷாக்ரா தோல்வியடைந்தனர்.
ஆசிய விளையாட்டில், ஜூடோவில் பெண்கள 78 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் இந்திய வீராங்கனை துலிகா மென் மங்கோலிய வீராங்கனையிடம் தோல்வி.
டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் 2வது சுற்றில் 6-0, 6-0 என்ற செட் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி.
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்மித் நாகல் 7-6, 6-4 என்ற செட் கணக்கில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி வென்றார்.
ஆசிய விளையாட்டில், குதிரையேற்றம் பிரிவில் இந்தியா 40 ஆண்டுகளுக்குப் பிறகு தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய விளையாட்டில், குதிரை ஏற்றம் போட்டியில் இந்திய வீரர்கள் அனுஷ், ஹிருதய், திய்வாகிருதி மற்றும் சுதிப்தி ஆகியோர் 209.205 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றனர்.
ஆண்கள் குத்துச்சண்டை 57 கிலோ பிரிவில் இந்தியாவின் சச்சின் சிவாச் இந்தோனேசிய வீரரை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் முன்னேறினார்.
பாய்மர படகு போட்டியில் ஆண்கள் WINDSURFER RSX பிரிவில் இந்தியாவின் எபாட் அலி வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் இந்திய அணி 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களைப் பெற்றுள்ளது.