விளையாட்டு

குஜராத் அணிக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Published On 2023-04-29 18:07 IST   |   Update On 2023-04-29 18:07:00 IST
  • முதலில் களமிறங்கிய நாராயண் ஜெகதீசன் 15 பந்துகளில் 19 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினர்.
  • ஷார்துல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆரம்பம் முதலே ரன் குவிப்பில் கவனமாக செயல்பட்டது.

முதலில் களமிறங்கிய நாராயண் ஜெகதீசன் 15 பந்துகளில் 19 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினர். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷார்துல் தாக்கூர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார். அடுத்தத்தடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் மற்றும் கேப்டன் நிதிஷ் ராணா முறையே 11 மற்றும் 4 ரன்களை மட்டும் எடுத்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.

 

15 ஓவர்களில் 135 ரன்களை எடுத்த கொல்கத்தா அணி 5 விக்கெட்களை இழந்து தவித்தது. இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்தது. கடைசியில் அதிரடி காட்டிய ஆண்ட்ரெ ரசல் 19 பந்துகளில் 34 ரன்களை குவித்து கடைசி பந்தில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார். குஜராத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்களை வீழ்த்தினார். 

Tags:    

Similar News