விளையாட்டு
null

டி20 தொடர்: இந்தியா-இலங்கை நாளை மோதல்

Published On 2024-07-26 11:15 IST   |   Update On 2024-07-26 11:18:00 IST
  • சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.
  • பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர்.

பல்லகெலே:

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி நாளை பல்லகெலேயில் நடக்கிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன்கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ரிங்குசிங், ஷிவம் துபே ஆகிய பேட்ஸ்மேன்களும், ஆல்-ரவுண்டர்கள் ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும் உள்ளனர்.

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளனர்.

20 ஓவர் உலக கோப்பையை இந்தியா வென்ற பிறகு ரோகித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றனர். அதன்பின் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சென்று 20 ஓவர் போட்டி தொடரை வென்றது.

தற்போது பலம் வாய்ந்த இலங்கையை அதன் சொந்த மண்ணில் இந்திய அணி சந்திக்கிறது. புதிய பயிற்சியாளர் கம்பீர் தலைமையின் கீழ் இந்திய அணி முதல் தொடரில் விளையாட உள்ளது. இதில் அவரது செயல்பாடு மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் சூர்யகுமார் யாதவின் கேப்டன்ஷிப் மற்றும் இளம் வீரர்களின் ஆட்டம் ஆகியவையும் கவனிக்கப்படும்.

அசலங்கா தலைமையிலான இலங்கை அணியில் குசால் மெண்டிஸ், சண்டி மால், நிசாங்கா, குசால் பெரைரா, பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகிய பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஹசரங்கா, ஷனகா, பந்து வீச்சில் மதுஷனகா, பினுரா பெர்னாண்டோ, தீக்ஷனா, பதிரனா ஆகியோரும் உள்ளனர்.

இந்தியா-சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரிங்குசிங், ரியான் பராக், ஷிவம் துபே, ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ், கலில் அகமது, ரவிபிஷ்னோய்.

இலங்கை-அசலங்கா (கேப்டன்), நிசாங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரைரா, சண்டிமால், அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மென்டிஸ், ஷனகா, ஹசரங்கா, விக்ரமசிங்கே, பினுரா பெர்னாண்டோ, அஷிதா பெர்னாண்டோ, மதுஷனகா, பதிரனா, தீக்ஷனா, துனித் வெல்லலகே.

Tags:    

Similar News