விளையாட்டு
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னேற்றம் - இந்தியாவின் சாட்விக், சிராக் ஜோடி சாதனை
- ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்றது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டியில் இந்திய ஜோடி இறுதிக்கு முன்னேறியது.
துபாய்:
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சாட்விக்-சிராக் ஜோடி, சீன தைபே ஜோடியுடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் சாட்விக், சிராஜ் ஜோடி 21-18 என முதல் செட்டை கைப்பற்றியது. இரண்டாவது செட்டில் 13-14 என இருந்த நிலையில் காயம் காரணமாக சீன தைபே ஜோடி விலகியது. இதையடுத்து, இந்திய ஜோடி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.