விளையாட்டு

நார்வே செஸ் தொடர்: 4வது சுற்றில் வெற்றி பெற்றார் குகேஷ்

Published On 2025-05-31 04:57 IST   |   Update On 2025-05-31 04:57:00 IST
  • நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.
  • 4-வது சுற்றில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்றார்.

ஸ்டாவஞ்சர்:

நார்வே கிளாசிக்கல் செஸ் போட்டி அந்நாட்டில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக சாம்பியன் உள்பட 6 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் இரு சுற்றுகளில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் தோல்வி கண்டார். 3-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை வீழ்த்திய குகேஷ் 3 புள்ளிகள் பெற்றார்.

இந்நிலையில், இதில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் குகேஷ், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் பாபியானோ கருணாவை சந்தித்தார். 4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து வெற்றி, தோல்வியை முடிவுசெய்ய நடந்த டைபிரேக்கரில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் பாபியோ கருணாவுக்கு அதிர்ச்சி அளித்தார். குகேஷ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.

நான்காவது சுற்று முடிவில் கார்ல்சென் 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பாபியானோ கருணா 7 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ஹிகாரு நகமுரா 5.5 புள்ளியுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். குகேஷ், அர்ஜூன் எரிகைசி தலா 4.5 புள்ளியுடன் 4-வது இடத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News