விளையாட்டு

U23 உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம்: தொடக்க நாளில் 4 இந்திய வீரர்கள் ஏமாற்றம்

Published On 2025-10-20 17:22 IST   |   Update On 2025-10-20 17:22:00 IST
  • 63 கிலோ எடைப்பிரிவில் கௌரவ் கிர்கிஸ்தான் வீரரிடம் தோல்வியடைந்தார்.
  • 77 கிலோ எடை பிரிவில் அன்கீத் செர்பியா வீரரிடம் தோல்வியுற்றார்.

23 வயதிற்கு உட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்தம் போட்டி செர்பியாவில் நடைபெற்று வருகிறது.

கிரேக்கோ ரோமன் பிரிவில் இந்தியாவை சேர்ந்த 4 வீரர்கள் இன்று கலந்து கொண்டனர். நான்கு பேரும் முதல் சுற்றிலே தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தனர்.

கௌராவ் 63 கிலோ எடை பிரிவில் கிர்கிஸ்தான் வீரர் குட்டுபெக் ஏ அப்துரசகோவ்-ஐ எதிர்கொண்டார். இதில் டெக்னிக்கல் சூப்பரியாரிட்டி அடிப்படையில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

77 கிலோ எடை பிரிவில் அன்கீத் இதேபோன்று செர்பியா வீரர் ஜலன் பெக்கிடம் தோல்வி அடைந்தார். ரோகித் புரா 87 கிலோ எடை பிரிவில் 0-9 என்ற அடிப்படையில் அமெரிக்க வீரர் பெய்டன் ஜே ஜேக்கப்சனிடம் தோல்வி அடைந்தார்.

ஜோகிந்தர் ரதீ 130 கிலோ எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் தமிர்கோன் ரக்மாடோவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

இதனால் இந்தியாவிற்கு இந்த பிரிவில் இன்று மிகுந்த ஏமாற்றமே கிடைத்தது. நாளை 55 கிலோ, 67 கிலோ, 72, 97 கிலோ எடைப்பிரிவுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Tags:    

Similar News