விளையாட்டு
புரோ கபடி லீக்: புனேவை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது தபாங் டெல்லி
- 12-வது புரோ கபடி லீக் போட்டி டெல்லியில் நடைபெற்றது.
- இன்று நடந்த இறுதிச்சுற்றில் புனேரி பல்தான் தோல்வி அடைந்தது.
புதுடெல்லி:
12 அணிகள் பங்கேற்ற 12-வது புரோ கபடி லீக் தொடர் டெல்லியில் நடைபெற்றது. லீக் போட்டிகள் மற்றும் பிளே ஆப் சுற்றுகள் முடிந்த நிலையில் தபாங் டெல்லி, புனேரி பல்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் தபாங் டெல்லி அணியும், புனேரி பல்தான் அணியும் மோதின.
ஆரம்பத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியாக ஆடி புள்ளிகளை எடுத்தன. முதல் பாதி முடிவில் டெல்லி அணி 20-14 என முன்னிலை பெற்றது.
இறுதியில், தபாங் டெல்லி அணி 31-28 என்ற புள்ளிக் கணக்கில் புனேரி பல்தான் அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.