கிரிக்கெட் (Cricket)

டிஎன்பிஎல் 2025: சேப்பாக் சூப்பர் கில்லீஸ்க்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது மதுரை பாந்தர்ஸ்

Published On 2025-06-28 18:09 IST   |   Update On 2025-06-28 18:09:00 IST
  • சதுர்வேத் 18 பந்தில் 31 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
  • ஆதீக் உர் ரஹ்மான் 28 பந்தில் 41 ரன்கள் விளாசினார்.

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 சீசனின் 25ஆவது போட்டி திண்டுக்கலில் நடைபெற்று வருகிறது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழைக் காரணமாக அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது.

மதுரை பாந்தர்ஸ் அணியின் ராம் அரவிந்த், பாலசந்தர் அனிருத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அரவிந்த் ரன்ஏதும் எடுக்காமல் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அனிருத் 4 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

3ஆவது விக்கெட்டுக்கு கேப்டன் சதுர்வேத் உடன் ஆதீக் உர் ரஹ்மான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. மதுரை பாந்தர்ஸ் 6.4 ஓவரில் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. சதுர்வேத் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்த நிலையில் சிலம்பரசன் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் விளையாடிய ஆதீக் உர் ரஹ்மான் 28 பந்தில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சரத்குமார் 1 ரன்னில் வெளியேறினார். முருகன் அஸ்வின் அதிரடியாக 34 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

19ஆவது ஓவரை விஜய் சங்கர் வீசினார். இந்த ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார். 19 ஓவர் முடிவில் மதுரை பாந்தர்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது. தன்வர் கடைசி ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுக்க மதுரை பாந்தர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்துள்ளது.

Tags:    

Similar News