TNPL 2025: கோவை கிங்ஸை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் வெற்றி
- சொற்ப ரன்களிலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
- 16.5 ஓவரில் 3 மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்தது.
9-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் நெல்லை சங்கர் நகரில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மைதானத்தில் நடக்கிறது.
இன்று நடைபெற்ற 22-வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கோவை அணி திருப்பூர் அணியின் பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
20 ஓவர் முடிவில் கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாலசுப்பிரமணியன் சச்சின் 24 ரன்கள் எடுத்தார்.
திருப்பூர் அணி தரப்பில் இசக்கிமுத்து 3 விக்கெட்டுகளையும் நடராஜன், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 138 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி திருப்பூர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்களாக அமித் சாத்விக், துஷார் ரஹேஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அமித் சாத்விக் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 66 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவருடன் நிலைத்து நிற்காமல் மற்ற வீரரகள் சொற்ப ரன்களிலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
கோவை அணி சார்பில் புவனேஸ்வரன், திவாகர், சுப்ரமணியன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் திருப்பூர் அணி 16.5 ஓவரில் 3 மட்டுமே இழந்து 140 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கோவையை வீழ்த்தி திருப்பூர் அணி வெற்றி வெற்றது.