டி20 கிரிக்கெட்டில் முதல் வீரராக வரலாற்று சாதனை படைத்த ஷகிப் அல் ஹசன்
- செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.
- டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 5-வது பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை ஷகிப் எட்டினார்.
2025 கரீபியன் பிரீமியர் லீக் (CPL) தொடரில் ஷகிப் அல் ஹசன் விளையாடி வருகிறார். இதில் செயின்ட் கிட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஷகிப் அல் ஹசன் தனது அபாரமான பந்துவீச்சால் 2 ஓவர்களில் வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 5-வது பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை ஷகிப் எட்டினார்.
அவரது 500-வது விக்கெட்டாக பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் ஆட்டமிழந்தார். பந்துவீச்சில் மட்டுமல்லாது, பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்பட்ட அவர், 18 பந்துகளில் 25 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த ஆல்-ரவுண்டர் திறனுக்காக அவர் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 7000+ ரன்கள் மற்றும் 500+ விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் முதல் மற்றும் ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது வீரர் ஷகிப். இதற்கு முன் டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரைன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த மைல்கல்லை எட்டிய முதல் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷகிப் என்பது குறிப்பிடத்தக்கது.