சிக்ஸ் விளாச ஆசைப்படும் பந்து வீச்சாளர் யார்? என்ற கேள்விக்கு ரோகித் சர்மா அளித்த பதில்..!
- சர்வதேச கிரிக்கெட்டில் 637 கிக்சர்கள் அடித்து முதலிடத்தில் உள்ளார்.
- 2ஆவதாக கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருபவர் ரோகித் சர்மா. பந்துகளை அடிக்கடி சிக்சருக்கு பறக்க விடுவதால், இவரை ரசிகர்கள் செல்லமாக ஹிட்மேன் என அழைக்கிறார்கள்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய பேட்டர் என்ற பெருமையை தன்வசம் வைத்துள்ளார். தற்போது வரை 637 சிக்சர்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக உள்ள கிறிஸ் கெய்ல் 553 சிக்சர்கள்தான் அடித்துள்ளார்.
இந்த நிலையில், நீங்கள் சிக்சர் அடிக்க விரும்பும் பந்து வீச்சாளர் யார்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோகித் சர்மா "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அனைவரது பந்திலும் சிக்ஸ் அடிக்க விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட பந்து வீச்சாளரை தேர்வு செய்து அடிக்க வேண்டும் என்பது கிடையாது.
என்னுடைய மனநிலை எப்போதும் ஒரே மாதிரியான நிலையில்தான் இருக்கும். வரனும் சிக்ஸ் அடிக்கனும். இதுதான் என்னுடைய மனநிலை. யார் எனக்கு பந்து வீசுகிறார்கள் என்பது பெரிய விசயம் அல்ல" எனத் தெரிவித்து்ளளார்.
அடுத்த மாதம் 9ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாட இருக்கிறது.