முதல் ஒருநாள் போட்டி: ஹசன் நவாஸ் அதிரடியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது பாகிஸ்தான்
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 49 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தரோபா:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என கைப்பற்றி யது.
இந்நிலையில், பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 49 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இவின் லீவிஸ் 60 ரன்னும், கேப்டன் ஷாய் ஹோப் 55 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 53 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய குடகேஷ் 18 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறஙகியது. ஹசன் நிவாஸ் 63 ரன்னும், கேப்டன் முகமது ரிஸ்வான் 53 ரன்னும், ஹூசைன் தலத் 37 பந்தில் 41 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.