ஒருநாள் தொடரில் இலங்கை அணியை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது பாகிஸ்தான்
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 211 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ராவல்பிண்டி:
இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 11 மற்றும் 14-ம் தேதிகளில் நடந்த ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் வெற்றி பெற்று 2-0 என கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி 45.2 ஓவரில் 211 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 212 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 44.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 3-0 என கைப்பற்றி அசத்தியது. பகர் சமான், ரிஸ்வான் அரை சதம் கடந்தனர்.
ஆட்ட நாயகன் விருது வாசிம் ஜூனியருக்கும், தொடர் நாயகன் விருது ஹரிஸ் ராப்புக்கும் வழங்கப்பட்டது.