கிரிக்கெட் (Cricket)

நான் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை: ஜேம்ஸ் ஆண்டர்சன்

Published On 2025-07-24 13:09 IST   |   Update On 2025-07-24 13:09:00 IST
  • 21 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
  • 708 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தலைசிறந்த ஸ்விங் பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஜேம்ஸ் ஆண்டர்சன். இங்கிலாந்து மண்ணில் இவரை எதிர்த்து பேட்டர்கள் விளையாடுவது சுலபமல்ல. 41 வயது வரை சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் கடைசி போட்டியில் விளையாடினார்.

இந்த நிலையில் தான் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை என ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆண்டர்சன் கூறுகையில் "நான் கடந்த வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன். ஆனால் முழு விருப்பத்துடன் ஓய்வு பெறவில்லை. கேப்டன், பயிற்சியாளர் மற்றும் கிரிக்கெட் வாரிய இயக்குனருடன் ஆலோசனையில் ஈடுபட்டேன். அப்போது அவர்கள் வேறு திசையில் செல்ல விரும்புவதாக தெரிவித்தார்கள்" என்றார்.

2003ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 21 வருடங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார்.

188 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 704 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீ்ழ்த்திய வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

முரளீதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வார்னே 708 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆண்டர்சன் 704 விக்கெட்டுகள் வீழ்த்தியள்ளார். அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Tags:    

Similar News