கிரிக்கெட் (Cricket)

ஆசிய கோப்பை 2025: ஆடும் லெவனில் இடம் பெறுவது சஞ்சுவா ஜித்தேஷ் சர்மா? வெளியான தகவல்

Published On 2025-09-09 12:54 IST   |   Update On 2025-09-09 12:54:00 IST
  • இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை நாளை எதிர்கொள்கிறது.
  • குல்தீப் யாதவுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

துபாய்:

17-வது ஆசிய கோப்பை போட்டி (20 ஓவர்) இன்று தொடங்கி 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் 8 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் அணிகளும், 'பி' பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

அபுதாபியில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- ஆங்காங் அணிகள் மோதுகின்றன. நாளை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்சை எதிர்கொள்கிறது. துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

டெஸ்ட் கேப்டனான சுப்மன் கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக தேர்வு பெற்றுள்ளார். இதனால் வீரர்கள் தேர்வு சவாலாக இருக்கும். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து சுப்மன் கில் தொடக்க வரிசையில் ஆடுவார்.

விக்கெட் கீப்பர் வாய்ப்பில் சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா இடையே போட்டி நிலவி வந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்கு பதிலாக ஜிதேஷ் சர்மா அணியில் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இது சஞ்சு சாம்சன் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் குல்தீப் யாதவுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News