கிரிக்கெட் (Cricket)
null

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளாசன் ஓய்வு

Published On 2025-06-02 15:16 IST   |   Update On 2025-06-02 15:37:00 IST
  • தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்குபவர் கிளாசன்.
  • கிளாசன் ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்தார்.

தென் ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக விளங்குபவர் கிளாசன். அவர் ஐபிஎல்-ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிளாசன் அறிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முன்னதாக இன்று ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

அவர் தென் ஆப்பிரிக்கா அணிக்காக 60 ஒருநாள் போட்டியில் விளையாடி, 2,141 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 174 ரன்கள் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2023) குவித்துள்ளார்.

58 டி20 போட்டிகள் விளையாடிய இவர் 1,000 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 81 ரன்கள் (இந்தியாவுக்கு எதிராக, 2022) எடுத்துள்ளார்.

4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடிய இவர் 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கிளாசன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து 2024-ம் ஆண்டே ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News