கிரிக்கெட் (Cricket)

குளோபல் சூப்பர் லீக்: இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அணி சாம்பியன்..!

Published On 2025-07-19 12:57 IST   |   Update On 2025-07-19 12:57:00 IST
  • கயானா அமேசான் வாரியர்ஸ் 196 ரன்கள் அடித்தது.
  • ரங்க்பூர் ரைடர்ஸ் அணியால் 164 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

குளோபல் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. இதில் இம்ரான் தாஹிர் தலைமையிலான கயானா அமேசான் வாரியர்ஸ்- நுருல் ஹசன் தலைமையிலான ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் களம் இறங்கிய கயானா அமேசான் வாரியர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 48 பந்தில் 67 ரன்கள் விளாசினார். ரஹ்மதுல்லா குர்பாஸ் 38 பந்தில் 66 ரன்கள் குவித்தார்.

பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ரங்க்பூர் ரைடர்ஸ் 164 ரன்னில் ஆல்அவுட் ஆனது. சாய்ஃப் ஹசன் 41 ரன்களும், இஃப்திகார் அகமது 46 ரன்களும் அடித்தும் அந்த அணியால் வெற்றிபெற முடியவில்லை. வெயின் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டும் இம்ரான் தாஹிர் மற்றும் குடகேஷ் மோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 32 ரன்கள் வித்தியாசத்தில் கயானா அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Tags:    

Similar News