கிரிக்கெட் (Cricket)
லண்டன் ஸ்பிரிட் அணியின் பேட்டிங் பயிற்சியாளரானார் தினேஷ் கார்த்திக்
- இந்தத் தொடர் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
- தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரின் 6-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தில் நடைபெறும் ஒரு தொழில்முறை 100 பந்து போட்டியே தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர். இதில் 8 அணிகள் பங்கேற்கும்.
இந்தத் தொடரில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
இந்தத் தொடரின் 6-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான லண்டன் ஸ்பிரிட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும் ஆலோசகராகவும் இந்திய அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தினேஷ் கார்த்திக் ஏற்கனவே ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் இதே பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.