null
ஆஸ்திரேலிய வீராங்கனைகளிடம் அத்துமீறிய வாலிபரால் பரபரப்பு
- வீராங்கனைகள் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் அத்துமீறல்.
- ஆஸ்திரேலிய அணி மானேஜர் புகார் அளிக்க, போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
மகளிர் உலக கோப்பை இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த புதன்கிழமை இங்கே ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான போட்டி நடைபெற்றது. இன்று தனது கடைசி போட்டியில் தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதனால் ஆஸ்திரேலியா அணி போட்டி முடிந்து அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டி முடிந்து மறுநாள், வியாழக்கிழமை ஆஸ்திரேலியா வீராங்கனைகள் இருவர், தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அருகில் உள்ள கஃபே-க்கு சாலை வழியாக நடந்து சென்றுள்ளனர்.
அப்போது வாலிபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளார். அவர்கள் அருகில் வந்த வாலிபர், விரும்பத்தகாத வகையில் தொட்டுள்ளார். வீராங்கனைகள் சுதாரிப்பதற்குள் அந்த இடத்தில் இருந்து அவர் தப்பி சென்றுவிட்டார்.
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பு மானேஜர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இரு வீராங்கனைளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்து, அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்தனர்.
மோட்டார் சைக்கிளின் நம்பரை வைத்து, போலீசார் குற்றவாளியை பிடித்துள்ளனர்.